கவிப்புயலின் போன்சாய்கவிதைகள்

போன்சாய் என்பது ஜப்பான் மற்றும் சீனாவில் மரம் வளர்க்கும் முறையாகும். பெரிய மரங்களை சிறிய தொட்டிக்குள் வளர்க்கும் முறையாகும். ஆலமரம் கூட அப்படி வளர்க்கப்படுகிறது. அந்த எண்ணக்கருவை கொண்டு அமைக்கப்படும் ஒருவகை ஹைக்கூவே போன்சாய் கவிதை ஆகும். எனினும் ஹைக்கூவுக்கும் போன்சாய் ஹைக்கூவுக்கும் அடியேன் கூறும் வேறுபாடுகள். 

1) ஹைக்கூவிற்கு ஒரு மரபு உண்டு. ஓரடி ஈரடி, ஈற்றடி, என்ற மரபு உண்டு. ஆனால் போன்சாய்க்கு அப்படி இல்லை. ஆனால் முடிவு திருப்பமாக அமையும். 

2) ஹைக்கூவில் நகைச்சுவையாக அமைந்தால் அது சென்றியு ஆகிவிடும். இங்கு சமூக விழிப்புணர்வு, நகைச்சுவை எல்லாம். ஒன்றாகவே கருதப்படும். 

3) ஹைக்கூவில் மொழிக்கலப்பு ஏற்பதில்லை. இங்கு அது தவறில்லை. 

இவை தவிர வேறுபாடு இருப்பின் நீங்கள் கூறுங்கள் நானும் அறிய விரும்புகிறேன். 

….. 

கவிஞன் நிகழ்காலத்தை படம் போட்டு காட்டுபவன். அதற்கேப்ப 

தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப

போன்சாய் அமைத்துள்ளேன். 

…… 

1) உலகமே 

     வைத்தியசாலை ஆக்கியது 

      கொரோனா 

……. 

2) காற்றுக்கு என்ன வேலி 

     யார் சொன்னது 

      முகக்கவசம் 

…… 

3) குற்றம் செய்யாதவருக்கும்.

     வீட்டுச்சிறை.

      தனிமைப்படுத்தல்.

….. 

4) ஜனநாயகக்கடமை.

     நீண்ட வரிசையில் நின்று

      வாக்களிப்பு.    

       தலைவர் வீடியோ உரை 

……

5) மழை மகிழ்ச்சிக்கும் 

     மரணத்துக்கும்

      காரணமாகிறது.

       தவளை. 

……

தொடரும்

Published by கவிப்புயல் இனியவன்

இயற்கையோடு வாழுங்கள் இயற்கையாக வாழுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக

Design a site like this with WordPress.com
தொடங்கவும்